NATIONAL

நாட்டின் வளர்ச்சி பாதையோடு இணைந்து மக்கள் பயணிக்க வேண்டும்

21 மார்ச் 2025, 4:43 AM
நாட்டின் வளர்ச்சி பாதையோடு இணைந்து மக்கள் பயணிக்க வேண்டும்

ஷா ஆலம், மார்ச் 21- நாடு மிக முக்கியமான வளர்ச்சி பாதையில் செல்லும் போது மக்களும் அதனுடன் சேர்ந்து பயணிக்க  அவர்களை தயார் படுத்திக்கொள்ள விட்டால்  வளர்ச்சி தடைப்படும். அதுபோலவே நாடு வேகமாகப் பயணிக்கும் போது  எந்த பிரிவு அல்லது  இன  மக்களும்  அவர்களை  நாட்டின் வளர்ச்சி பாதையில் இணைத்துக் கொள்ள  தவறினால் நாம் வளர்ச்சிக்கான பாதையை தவறவிட்டவர்களாவோம்.

நாட்டு வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இந்திய சமுதாயம்,  பிள்ளைகளின் கல்வி மற்றும் பொருளாதார  மேம்பாட்டில்  அதிக கவனம் செலுத்தி  முன்னேற்றத்திற்கு  முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தருணம்  இது. ஆனால்  நாம் நமது இலக்கை அடைவதற்கு தடையாக  அல்லது ஒரு சிலரின்  சுய இலாபத்திற்கும், தேவைகளுக்கும் சமுதாயத்தை பகடையாக்க நினைப்பவர்களிடம் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டியது  மிக  அவசியம் .

நாட்டில் உள்ள  இந்து  ஆலயங்களின்  அவ்வபோதைய  நிலை  இந்தியர்களின்  நேரத்தை அதிகம் வீண்டிப்பதால், சமுதாயம் கவனம்  செலுத்த வேண்டிய  முக்கிய விவகாரத்திலிருந்து  விலகி  செல்ல காரணமாகிறது.

ஆலயங்கள்  சரியான செயல் திட்டம் அல்லது  வரைமுறையின்றி  அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப  அமைக்க, நமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை  சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். பிறகு அச்செயல் அனைவருக்கும்  ஒரு பெரிய பிரச்சனையாக மாறும் பொழுதே, அவர்கள்   சமுதாயத்தை துணைக்கு  அழைப்பது ஒரு வழக்கமாகிவிட்டது.

இந்த விஷயத்தில் நாட்டுக்கு ஒரு சிறந்த முன்  உதாரணத்தை சிலாங்கூர் மாநிலம் கடந்த  2008ம் ஆண்டு முதல்  வழங்கி வருகிறது.

அவை , 1. ஆலயங்கள்  ஒரு  நிர்வாக  குழுவை  கொண்டிருக்க வேண்டும். 2. அந்த  நிர்வாகம்  தேசிய சங்கங்களின் பதிவு இலாக்காவிடும்  பதிவு பெற்றிருக்க வேண்டும்.  3. அது முறையான வங்கி கணக்கை கொண்டிருக்க வேண்டும். 4. அந்த நிர்வாகம் மாநில அரசாங்கத்திடம்   ஆலயம் இருக்கும்  இடத்திற்கு  நில  உரிமை க்கு விண்ணப்பிக்க வேண்டும்.  இதன் வழி தனக்கு தோன்றி விதமாகக் கோவில்களை கட்டுவது மற்றும் முறையற்ற முறையில்  அவை  நிர்வகிப்பது  போன்ற தவறுகள்  பெரிய அளவில்  குறைக்கப்பட்டுள்ளது.

அந்த 4 நடைமுறைகளை  நாட்டிலுள்ள எல்லா ஆலயங்களும் பின்ப்பற்றினால்  சட்டவிரோத ஆலய கட்டுமான பிரச்சனைக்கு தீர்வு காணலாம்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.