முக்கா, மார்ச் 20 - இங்குள்ள சுங்கை பாத்தாங் முக்காவில் கடந்த
செவ்வாய்க்கிழமை மாலை 3.50 மணியளவில் ஆற்றில் குளித்துக்
கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகப் புகார் செய்யப்பட்ட
சிறார்களில் மற்றொருவரின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
சுஸி கியூ (வயது 7) என்ற அந்த சிறுமியின் உடல் சம்பவ இடத்திலிருந்து
சுமார் 6.4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பந்தாய் காலா டானாவில்
நேற்று காலை 9.25 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அச்சிறுவனின் உடல் மேல் நடவடிக்கைக்காக முக்கா மருத்துவமனைக்கு
கொண்டுச் செல்லப்பட்டதாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கை மையம் கூறியது.
இச்சம்பவத்தில் இறந்த சிறுவனின் மூத்த சகோதரியான டெக்ஸ்பர்
குவாங் வேய் (வயது 10) என்றச் சிறுவனின் உடல் மீட்புப் பணியில்
ஈடுபட்டிருந்த காவல் துறையினரால் நேற்று மாலை 4.40 மணியளவில்
கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த சிறுமியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேடி மீட்கும்
நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3.50 மணியளவில் அந்த ஆற்றில்
குளித்துக் கொண்டிருந்த அவ்விருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.தன் பிள்ளைகளைக் காப்பாற்ற அவர்களின் தாயார் மேற்கொண்ட முயற்சி பலனிக்காத நிலையில் அவர் வலுவான நீரோட்டம் அவர்களை அடித்துச் சென்றது.


