பாசல், மார்ச் 20 - சுவிட்சர்லாந்து பொது பூப்பந்து போட்டியின் முதல் ஆட்டமே, தேசிய ஆடவர் இரட்டையரான கொ சி வெய் நுர் இசுடின் ரும்சானி ஜோடிக்கு நிறைவு ஆட்டமாக அமைந்தது.
அந்த முதல் ஆட்டத்தில், ஜப்பான் ஜோடியுடன் களம் கண்ட அவர்கள், தோல்வியுற்று, போட்டியிலிருந்து விடைபெற்றனர்.
பாசல் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், அவர்கள் சி வெய் றுர் இசுடின் ஜப்பானின் ஹிரோகோ மிடோரிகவா- கோய் யமாசிதா ஜோடியுடன் விளையாடினர்.
முதல் செட்டில், 25-23 என்று தோல்வி கண்ட சி வெய் நுர் இசுடின், இரண்டாம் செட்டில் 21-15 என்று வெற்றி பெற்றனர். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாம் செட்டில் 11-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டு ஆட்டத்தை நிறைவு செய்தனர்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய நாட்டின் ஜஸ்தின் ஹொ, இரு தகுதிச் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று, முதல் சுற்று ஆட்டத்திற்குத் தேர்வாகினார்.
முதல் ஆட்டத்தில், அவர் ஜப்பானின் யுஷி டனாகாவுடன் விளையாடவுள்ளார்.
-- பெர்னாமா


