பெட்டாலிங் ஜெயா, மார்ச் 20 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு 22 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் என்று பிளஸ் மலேசியா கணித்திருக்கிறது.
அதில் 70 ஆயிரம் வாகனங்கள் LPT2 எனப்படும் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை இரண்டைப் பயன்படுத்தும் என்று பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி டத்தோ சகாரியா அஹ்மட் ஸபிடி தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள் காலக்கட்டத்தில் குறிப்பாக இம்மாதம் 27 தொடங்கி 29 வரை மற்றும் ஏப்ரல் மாதத்தில் 4 தொடங்கி 6ஆம் தேதி வரை நெடுஞ்சாலைகளில் அதிகமான வாகனங்கள் பயணிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
எனவே, வழக்க நாட்களுக்கு மாறாக இம்முறை 20 விழுக்காட்டு அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட 22 லட்சத்திற்கு அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் என்று அனுமானித்திருக்கிறோம்." என சகாரியா தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள் காலத்தில் போக்குவரத்தை எதிர்கொள்வது தொடர்பில், பெர்சாடா பிளசில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சகாரியா அதனை கூறினார்.
பெர்னாமா


