கோலாலம்பூர், மார்ச் 20 - மோசடி குற்றங்களைக் களைவதற்கும், தற்போதையக் குற்றச் சூழலுக்கு ஏற்பவும் மூன்று புதிய சட்ட விதிமுறைகளை அரச மலேசிய காவல்துறை படை (பி.டி.ஆர்.எம்) முன்மொழிந்துள்ளது.
இதில் போலி வங்கி கணக்குகளைக் வைத்திருப்பதற்கு, ஆட்களைச் சேர்ப்பதும் ஒரு குற்றச் செயலாக உட்படுத்தப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோ ஸ்ரீ ரம்லி முஹமட் யூசோப் கூறினார்.
தங்களுக்குச் சொந்தமான வளாகங்களை வாடகைக்கு விடுவது அல்லது குற்றவியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயல்படுபவர் மீது நடவடிக்கை எடுப்பது இரண்டாவது சட்ட விதிமுறை ஆகும்.
மேலும், குற்றவியல் சட்டத்தின் கீழ், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அழித்தல், மூன்றாவது சட்ட விதிமுறை ஆகும் என்று ரம்லி முகமட் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் இத்தகவல்களைக் கூறினார்.
பெர்னாமா


