அமெரிக்க, மார்ச் 19 - அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று பூமிக்குத் திரும்பினர்.
அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம், அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து விடைபெற்று பூமியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் ஆய்வை மேற்கொள்ள, கடந்தாண்டு ஜூன் 5-ஆம் தேதி விண்வெளிக்குச் சென்ற அவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கடந்த ஒன்பது மாதங்களாகப் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவியது.
தற்போது அவர்களுக்கு மாற்றாக, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு புதிய விண்வெளி வீரர்கள், அமெரிக்க செல்வந்தர், எலோன் மாஸ்க்கு சொந்தமான டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் அனைத்துலக விண்வெளி மையத்தைச் சென்றடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அதே டிராகன் விண்கலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்சும் புட்ச் வில்மோரும் இன்று பூமிக்குத் திரும்பியுள்ளார்.
--பெர்னாமா


