கோலாலம்பூர், மார்ச் 19 - திடல் போலிங் விளையாட்டு அணிக்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்காக, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு எப்போதும், தேசிய விளையாட்டு மன்றத்துடன் உடன் இணைந்து செயல்படும்.
அண்மையில், தேசிய மகளிர் திடல் போலிங் விளையாட்டாளர் நோர் ஃபாரா அப்துல்லா, அனைத்துலக அளவில் பதிவு செய்த சாதனையைத் தொடர்ந்து தற்காத்துக்கொள்ள, தமது தரப்பு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று கேபிஎஸ் அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் திடல் போலிங் தற்போது இல்லை என்பதால், அதை பற்றி விவாதித்தோம். திடல் போலிங்கில் நமது விளையாட்டு வீரர்கள் தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.
எனவே, தேசிய விளையாட்டு மன்றம், தொடர்ந்து நடைபெற்று வரும் கலந்துரையாடல்களின் மூலம், ஃபரா அந்த தரவரிசையில் நீடிப்பதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் வழங்குவோம்" என்றார் அவர்
கடந்த மார்ச் 4-ஆம் தேதி, உலக கிண்ணத் தொடரில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் உலகத் தரவரிசை அடிப்படையில், முதன் முறையாக, முதல் நிலைக்கு முன்னேறி உலக வீராங்கனையாக நோர் ஃபாரா அப்துல்லா வரலாறு படைத்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு உலக உள்ளரங்கு திடல் போலிங் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று அவர் சாதனை படைத்திருந்தார்.
அதேவேளையில், கலப்பு இரட்டையர் பிரிவில், இசாட் ஷாமிர் உடம் களம் கண்ட 24 வயதுடைய நோர் ஃபாரா அப்துல்லா வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார்.
--பெர்னாமா


