ஷா ஆலம் மார்ச் 17 ;- நேற்று ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் நடந்து முடிந்த ஜ. செ. கவின் ஆண்டு மாநாட்டில் ஒரு புது யுகத்திற்கு அடித்தளம் வகுத்துள்ளனர் அக் கட்சியின் பேராளர்கள். நாட்டின் நடப்பு அரசாங்கத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசின் முதுகெலும்பாக விளங்குவது ஜ.செ.க என்றால் மிகையாகது.
அந்த கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குடும்பத்தின் அரசியல் வழிகாட்டலில் அல்லது ஆதிகத்தில் இருந்து வெளிவர தொடங்கியிருப்பதை மலேசியர்கள் மகிழ்வுடன் ஏற்று வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஜ. செ. க முன்னால் சிங்கப்பூர் அதிபரும் பங்சார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் (1964 முதல் 1969 வரை ) இருந்த தேவன் நாயர் அவர்களால் அமைக்கப்பட்டது.. அவர் ஒரு சிங்கப்பூர் பிரஜை என்பதால் டாக்டர் சென் மான் ஹின், டாக்டர் ஜீவரத்தினம், கோ ஹோக் குவான், பான் யூ தெங், லிம் கிட் சியாங் போன்ற மலேசியர்களை கட்சியின் தலைத்துவத்தை ஏற்க தயார் செய்தார்.
கால ஓட்டத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் பல முன்னேடி, துடிப்பு மிக்க தலைவர்கள் பலர் ஒதுக்கப்பட்டு அல்லது ஒதுங்கியதால் அது லிம் கிட் சியாங் கின் முழு கட்டுப்பாட்டில் இயங்கத் தொடங்கியது. சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் லிம் கிட் சியாங் குடும்பத்தின் இரும்பு பிடியிலிருந்து விலகி கோபிந் சிங் டியோ தலைமையில் வெளிச்சத்தை நோக்கி அக்கட்சி பயணிக்க தொடங்கியுள்ளதாக மகிழுவுடன் வரவேற்றனர் கட்சி உறுப்பினர்கள் பலர்.
நேற்று நடந்த அதன் காங்கிரஸில் பலத்த போட்டி எதிர்பார்க்கப்பட்டது. பேராளர்கள் கட்சியில் எந்த பிளவுக்கும் இடமளிக்காமல் ஒரு நடுநிலையான தலைமைத்துவத்திற்கு வாக்களித்து கட்சி புதிய தோற்றத்தில் புது கொள்கைகளுடன் ஒற்றுமையாக முன்னோக்கி செல்ல 2025-2028 மத்திய செயற்குழுவிற்கு வாக்களித்துள்ளனர்.
மேலும் அக்கட்சியின் அமைப்பு விதி முறைகள் ஒன்றுப்பட்ட ஒரு குழு சிறந்த தலைவரையும் மற்று பொறுப்புகளுக்கு சிறந்தவர்களை தேர்ந்தெடுக்க இலகுவானது என்பதால் அதிகம் பிரச்சினைகள் இன்றி கட்சிக்கு சிறந்த சேவை வழங்க கூடியவர்கள் தலைமைத்துவத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
தேசிய தலைவராக கோவிந்த் சிங் டியோ
துணை தேசிய தலைவராக ஙா கோர் மிங்
துணை தேசிய தலைவர்களாக
1) சோங் சியெங் ஜென்
2) தியோ நீ செங்
3) இங் சுயீ லிம்
4) சியாஹ்ரெட்ஸான் பின் ஜோஹன்
5) அருள் குமார் ஏ/எல் ஜம்புநாதன்
பொதுச்செயலாளராக லோக் சீயூ ஃபூக்
துணை பொதுச் செயலாளர்களாக
1) சிம் சீ கியோங்
2) யோவ் சோவ் சுவான்
3) ராம் கர்பால் சிங்
தேசிய பொருளாளராக ஙெ கூ ஹாம்
உதவி தேசிய பொருளாளராக இங் ஸீ ஹான்
தேசிய அமைப்புச் செயலாளராக கூ போய் தியோங்
தேசிய உதவி அமைப்பு செயலாளர்களாக
1) லீ சின் சென்
2) டான் ஹாங் பின்
தேசிய பிரச்சார செயலாளராக யோ பீ யின்
உதவி பிரச்சார செயலாளராக
1) சைஃபுரா பிந்தி ஒத்மான்
2) வோங் ஷு கி
சர்வதேச செயலாளராக கஸ்தூரி ராணி பட்டு
உதவி சர்வதேச செயலாளராக
ஆலிஸ் லாவ் கியோங் யியெங்
தேசிய அரசியல் கல்வி இயக்குநராக லீ சுவான் ஹவ்
அரசியல் கல்வி உதவி இயக்குநர் விவியன் வோங் ஷிர் யீ
மூலோபாய இயக்குநராக லீவ் சின் தோங்
கொள்கை இயக்குநராக சான் ஃபூங் ஹின்
தேர்தல் இயக்குநராக வோங் கா வோ
மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக
1) தியோ கோக் சியோங்
2) சோ கோன் யோவ்
3) லியாவ் காய் துங் ஆகியோருடன் முன்னால் தலைவர் லிம் குவான் எஙை கட்சியின் ஆலோசகராகவும் நியமித்துள்ளனர்..


