கோத்த கினபாலு, மார்ச் 15 - சபா மாநிலம் வெள்ளப் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. பியூபோர்ட்டில் செயல்பட்டு வந்த தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருந்த அனைவரும் இன்று காலை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
டேவான் டிஎஸ்பி டுன் பனீரில் செயல்பட்டு வந்த கடைசி நிவாரண மையம் இன்று காலை 9.00 மணிக்கு மூடப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் ஒரு அறிக்கையில் கூறியது.
வெள்ளம் முழுமையாக வடிந்ததைத் தொடர்ந்து தற்காலிக நிவாரண அந்த மையத்தில் தங்கியிருந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


