NATIONAL

இவ்வாண்டு வரை 34 வயதுக்குட்பட்ட 5,272 இளைஞர்கள் திவாலாகியுள்ளனர்

14 மார்ச் 2025, 4:43 AM
இவ்வாண்டு வரை 34 வயதுக்குட்பட்ட 5,272 இளைஞர்கள் திவாலாகியுள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 14 - கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரை 34 வயதுக்குட்பட்ட 5,272 இளைஞர்கள் திவாலாகியுள்ளனர்.

அந்த எண்ணிக்கையில் 5,189 பேர், 25 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், 83 பேர், 25 வயதிற்கு கீழ்பட்டவர்கள் என்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு இளைஞர்களிடையே திவால் நிலை 727ஆக பதிவாகியிருந்த வேளையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 150ஆக அதிகரித்து 877-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசிய திவால் நிலைத் துறையின் பதிவுகளின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டில் திவால் வழக்குகளின் முக்கியக் காரணம் தனிநபர் கடன்களை உள்ளடக்கியதாக உள்ளது என்பதாகும்" என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு நிலவரப்படி, திவாலானதாக அறிவிக்கப்பட்ட 35 வயது மற்றும் அதற்கும் குறைவான இளைஞர்களின் எண்ணிக்கை மற்றும் பிரச்சனைக்கான முக்கிய காரணம் குறித்து செனட்டர் ரொடெரிக் வோங் சியூ, நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு ஹன்னா அவ்வாறு பதிலளித்தார்.

இதைத் தவிர்த்து, 1,148 வணிகக் கடன், 474 வீட்டுக் கடன், 463 மற்ற கடன்கள் ஆகியவற்றினாலும், இந்த வயதினர் திவாலாகி உள்ளதையும் ஹன்னா சுட்டிக்காட்டினார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.