NATIONAL

இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் லீ சீ ஜியா தோல்வி

13 மார்ச் 2025, 6:56 AM
இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் லீ சீ ஜியா தோல்வி

இங்கிலாந்து, மார்ச் 13 - இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஹாங்காங் போட்டியாளரிடம் தோல்வி கண்டு தேசிய ஒற்றையர் ஆட்டக்காரர் லீ சீ ஜியா

முதல் சுற்றில் வெளியேறினார்,

ஹாங்காங்கின் ங் கா லொங்குடன் முதல் சுற்றில் மோதிய லீ சீ ஜியா முதல் செட்டில் 21-19 என்று வெற்றி பெற்றார். ஆனால், அடுத்த இரு செட்களில் அதனைத் தற்காத்துக்கொள்ள முடியாமல் 21-16, 21-12 என்ற நிலையில் அவர் தோல்வியைத் தழுவினார்.

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில், நாட்டின் தேசிய இரட்டையரான ஆரோன் சியா- சொ ஆய் யிக் ஜோடியும் முதல் சுற்றில் தோல்வி அடைந்துள்ளது.

டென்மார்க் இணையுடன் மோதிய மலேசிய இணை முதல் செட்டில் 21-18 என்ற நிலையில் இழந்த போதிலும், 16-21 என இரண்டாம் செட்டை கைப்பற்றினர்.

ஆனால், அவர்கள் 18-21 என்று மூன்றாம் செட்டில் தோல்வியை தழுவினர்.

அதேபோல, ஒங் யுவ் சின்-தியோ ஈ யீ ஜோடியும் 18-21, 19-21 என்று உபசரணை நாட்டினரிடம் நேரடி செட்களில் வீழ்ந்தனர்.

மற்றொரு நிலவரத்தில், கலப்பு இரட்டையர் பிரிவில் கோ சுன் ஹுவாட்-ஷிவொன் லை ஜெம்மி ஜோடியின் வெற்றி நாட்டின் தேசிய பூப்பந்து அணிக்குச் சற்று உற்சாகத்தைக் கொண்டு வந்தது.

கணவன் மனைவி தம்பதியான,அந்த ஜோடி தாய்லாந்தின் தேச்சபோல் புவரனுக்ரோஹ்-சுபிஸ்ஸரா பாவ்சம்பிரானுடன் களம் கண்டனர்.

அதில், 22-20, 9-21 மற்றும் 21-18 என்ற நிலையில் 60 நிமிடங்களில் தங்களின் வெற்றியை உறுதி செய்தனர்.

காலிறுதிக்கு முன்னதாக நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் ஹுவாட்-ஷிவொன் இணை, ஸ்காட்த்திலாந்து இணையுடன் மோதவிருக்கின்றனர்.

இதனிடையே, கலப்பு இரட்டையர் பிரிவில் களம் கண்ட ஹோ பாங் ரோற்செங் சு யின் எனும் நாட்டின் மற்றுமொரு ஜோடி தென் கொரியா இணையிடம் தோல்வி கண்டது.

17-21, 18-21 என்று கி டொங் ஜூ-ஜியோங் ன எயுன் இணையிடம் மலேசியா வீழ்ந்தது.

அதேவேளையில், தேசிய ஒற்றையர் வீரர் லியோங் ஜூன் ஹொவும் நடப்பு வெற்றியாளரான இந்தோனேசியாவின் ஜோனாத்தன் கிறிஸ்டியிடம் 11-21, 19-21 என்ற நிலையில் தோல்வியடைந்தார்.

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.