NATIONAL

சட்டவிரோதக் குடியேறிகளை திரும்ப அனுப்பும் அமெரிக்காவின் நடைமுறையைப் பின்பற்ற எண்ணம் இல்லை

13 மார்ச் 2025, 6:37 AM
சட்டவிரோதக் குடியேறிகளை திரும்ப அனுப்பும் அமெரிக்காவின் நடைமுறையைப் பின்பற்ற எண்ணம் இல்லை

கோலாலம்பூர், மார்ச் 13 - சட்டவிரோதக் குடியேறிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பும் அமெரிக்காவின் கொள்கையைப் பின்பற்ற உள்துறை அமைச்சு தற்போது எண்ணம் கொண்டிருக்கவில்லை.

நாட்டிற்குள் குவிந்து கிடக்கும் அந்நிய நாட்டினர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண கடுமையான அப்புதிய கொள்கையை அமைச்சு அமல்படுத்தாது என்று துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

நாட்டில் சட்டவிரோதக் குடியேறிகளின் இருப்பைக் கட்டுப்படுத்த, உள்துறை அமைச்சு, கட்டுப்பாட்டு நடைமுறைகளை தொடர்ந்து மேம்படுத்துவதோடு குடிநுழைவு விதிமுறைகளையும் அமல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு டிசம்பரில், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் செயல்படுத்தி வரும் முற்போக்கான முயற்சிகளில், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் கட்டுப்பாடு, பயணிகள் முன் பரிசோதனை முறையின் அறிமுகம் ஆகியவை முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதைத் தவிர்த்து, நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் இருப்பைக் கட்டுப்படுத்துவதற்கு,அமலாக்க நடவடிக்கைகளையும் உள்துறை அமைச்சு செயல்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் கொள்கையில் அமெரிக்காவின் வழிமுறைகளைப் பின்பற்ற அமைச்சு திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் செனட்டர் அஸஹார் ஹசான் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா இவ்வாறு பதிலளித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.