இஸ்தான்புல், மார்ச் 13 - பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட "போதைப்பொருள் போரில்" மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்தே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்வதற்காக நேற்று நெதர்லாந்தின் தி ஹேக் நகருக்கு கொண்டு வரப்பட்டதாகப் பிலிப்பைன்ஸ் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹாங்காங்கிலிருந்து மணிலா திரும்பிய போது விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட டுடெர்தே நேற்று ஒரு தனி விமானத்தில் தி ஹேக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் .
தி ஹேக்கிற்குப் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு விமானம் துபாயில் நின்றது.
தனது தந்தைக்காக சட்டக் குழுவை ஏற்பாடு செய்வதில் உதவுவதற்காக பிலிப்பைன்ஸின் துணை அதிபரான அவரது மகள் சாரா டுடெர்தே நேற்று தி ஹேக்கிற்குப் புறப்பட்டார்.


