காஸா, மார்ச் 13 - கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48,515 பேராக உயர்ந்துள்ளது. பலியானோரில் பெரும்பாலோர் சிறார்கள் மற்றும் பெண்கள் என மருத்துவ வட்டாரங்கள் நேற்று கூறின.
இக்கோரத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 111,941 பேராக அதிகரித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகள் சம்பவ இடத்தை அடைய முடியாத நிலை அங்கு நிலவுகிறது.
காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தததோடு காயமடைந்த மேலும் 14 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


