கோலாலம்பூர், மார்ச் 12 - அரசாங்க கிளினிக்குகளின் செயல்படும் அவசர சிகிச்சை நேரத்தை நீடிக்கும் உடனடி திட்டம் எதனையும் சுகாதார அமைச்சு கொண்டிருக்கவில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பல கிளினிக்குகளில் நேரத்தை நீடிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அவசர சிகிச்சை யூனிட்டில் பச்சை மண்டலப் பிரிவில் நெரிசல் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என சுகாதாரத்துறை துணையமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சவ்னி தெரிவித்தார்.
கினினிக்குகளில் அவசர சிகிச்சை யூனிட் கீழ் பச்சை மண்டல பிரிவின் நெரிசலை தீர்ப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை தாங்கள் இன்னும் ஆராய்ந்து வருவதாகக் கேள்வி பதில் அமர்வின் போது அவர் கூறினார்.
அரசாங்க மருத்துவமனைகளில் அவசர சிகிச்சையின் நேரத்தை நீட்டிக்கபடுவதால் ஏற்படும் நெரிசல் பிரச்சனை குறித்து டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்ட துணைக் கேள்விக்கு லுக்கானிஸ்மான் இவ்வாறு பதிலளித்தார்.


