சிரம்பான், மார்ச் 12- கட்டுப்பாட்டை இழந்த விரைவு பேருந்து கவிழ்ந்ததில் ஆறு பயணிகள் காயங்களுக்குள்ளான வேளையில் மேலும் 34 பேர் காயமின்றித் தப்பினர்
இச்சம்பவம் இன்று காலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தின் 245.5வது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இவ்விபத்து குறித்து தமது துறைக்கு காலை 6.01 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக ரெம்பாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கை அதிகாரி அமார் இஷாம் மொக்தார் கூறினார்.
தகவல் கிடைத்த 15 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததனர். மலாக்காவில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த அந்த பேருந்தில் ஓட்டுநரும் 28 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் என உள்பட 40 பயணிகள் இருந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது ஆரம்ப கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.
விபத்தின் விளைவாக ஆறு பெண்கள் காயமடைந்த வேளையில் அவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிறப்பு இ.எம்.ஆர்.எஸ். குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் முதலுதவி வழங்கினர்.
அவர்களில் இருவர் மேல் நடவடிக்கைக்காக சிரம்பான் உள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அவர் இன்று கூறினார்.
பேருந்து ஓட்டுநர் லேசான காயங்களுக்கு மட்டுமே ஆளானார். மற்ற பயணிகள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து கோலாலம்பூருக்கு மற்றொரு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.


