குவாந்தான், மார்ச் 12 - இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இறந்த குழந்தையின் உடலை கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ இரண்டு சகோதரிகளை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
இருபத்து நான்கு மற்றும் 25 வயதுடைய அவ்விரு பெண்களும் ரொம்பினில் இரு வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
வேலையில்லாதவரான 24 வயது பெண் காலை 9.50 மணியளவில் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார். வீட்டின் படுக்கையறையில் சோதனை செய்தபோது'கட்டுப்படுத்தப்பட்
தொடர் சோதனையில் சந்தேக நபரின் அறை மேஜையில் பிரசவத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் என சந்தேகிக்கப்படும் மாத்திரைகள் அடங்கிய மூன்று பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அவரது சகோதரியான இரண்டாவது சந்தேக நபர் பிற்பகல் 3.00 மணியளவில் ரொம்பின் மாவட்ட காவல் தலைமையக வளாகத்தில் கைது செய்யப்பட்டார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 315 பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இரு சகோதரிகளும் மார்ச் 13 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


