கோலாலம்பூர், மார்ச் 12- நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரந்தர வருமானமாக மாதம் 25,700 வெள்ளியைப் பெறும் வேளையில் தகுதிகேற்ப மேலும் அதிக நிதிச் சலுகைளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை பெறுவதாகப் பிரதமர் அலுவலகம் கூறியது.
குறைந்த மாதாந்திர வருமானம் காரணமாக தாங்கள் கடனாளியாகும்
நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் உள்பட பல நாடாளுமன்ற
உறுப்பினர்கள் வெளியிட்ட குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாகப்
பிரதமர் அலுவலகம் இந்த விளக்கத்தை அறிக்கை ஒன்றின் வாயிலாக
வெளியிட்டது.
நாட்டில் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும் போது நாடாளுமன்ற
உறுப்பினர்கள் பெறுவதற்கு தகுதி உள்ள அலவன்ஸ் மற்றும் பணக்
கோரிக்கைள் அடங்கிய பட்டியலை அந்த அலுவலகம் பகிர்ந்து
கொண்டுள்ளது.
- நாடாளுன்றக் கூட்டத் தொடர் பங்கேற்பு அலவன்ஸ்- நாள் ஒன்றுக்கு
4000 வெள்ளி
- பொது கணக்காய்வுக் குழு/தேர்வுக் குழு கூட்ட அலவன்ஸ் - தினசரி 300
வெள்ளி (நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு அப்பால்)
- அதிகாரப்பூர்வ விளக்கமளிப்பு அலவன்ஸ் - தினசரி 300 வெள்ளி
- தினசரி வாழ்வியல் அலவன்ஸ்- தினசரி 100 வெள்ளி (நாடாளுமன்ற
வருகை அல்லது வீட்டிலிருந்து 32 கிலோ மீட்டருக்கு அப்பால்
மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு)
- பயணக் செலவினக் கோரிக்கை- சுயமாக வாகனம் ஓட்டுவது, பொது
அல்லது தரைப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது
- தங்குமிட பணக் கோரிக்கை- ஹோட்டல் மற்றும் சலவைச் சேவை
வெளிநாட்டுப் பயணங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறத்
தகுதி உள்ள சலுகைகள் பின்வருமாறு -
- உணவு அலவன்ஸ்- ஒரு இரவுக்கு 340 வெள்ளி
- தினசரி வாழ்வியல் அலவன்ஸ் – தினசரி 170 வெள்ளி
- தங்குமிட அலவன்ஸ்- ஹோட்டல் மற்றும் சலவை செலவு
- அந்நிய நாணய பரிவர்த்தனை காரணமாக ஏற்படும் இழப்புக்கான நிதி
கோரிக்கை
- டிப்ஸ் - உணவு அலவன்சில் 25 விழுக்காடு
இந்த தொகை அனைத்தையும் கூட்டினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
மாதம் வருமானம் 30,000 முதல் 40,000 வெள்ளியை எட்டும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகக் கூறியிருந்ததை அந்த
அறிக்கை சுட்டிக்காட்டியது.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் வருமானத்தை
விவேகத்துடன் நிர்வகிக்கும் அதேவேளையில் மக்கள் குறிப்பாக குறைந்த
வருமானம் பெறும் தரப்பினரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


