கோலாலம்பூர், மார்ச் 11 - தொழில்துறைகளைச் சீரமைப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக போட்டித்தன்மையை வழங்கும் வகையில், பல்வேறு நிலையிலான வரி விதிப்பு முறையை, அரசாங்கம் இவ்வாண்டு அமல்படுத்தவுள்ளது.
அது குறித்து, தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களோடு விரிவான கலந்துரையாடல் நடத்தவிருப்பதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
"ஏனெனில், தற்போதுள்ள தொழில்துறைகள், அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் தொடர்புடையது. எனவே, நாங்கள் ஒரு பங்குதாரர் கலந்துரையாடலை நடத்துவோம். இந்த ஆண்டில் நாங்கள் அதை செயல்படுத்துவோம். நான் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பைக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செனட்டர் டான் ஶ்ரீ லொச் கியான் சுவான் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு, ஸ்டீவன் சிம் அவ்வாறு பதிலளித்தார்.


