ஜகார்த்தா, மார்ச் 11 - இந்தோனேசியாவின் கார் விற்பனை பிப்ரவரி மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 2.2 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவான முதல் வளர்ச்சி இதுவாகும் என்று அந்நாட்டு கார் சங்கத்தின் தரவுகள் கூறுகின்றன.
தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் கடந்தாண்டு நடைபெற்ற தேசியத் தேர்தல்களின் போது கார் வாங்குவதை நிறுத்தி வைக்கும் போக்கு மற்றும் பலவீனமான செலவிடும் திறன் காரணமாக கார் விற்பனை சவால்களை எதிர்கொண்டதாக வாகன விற்பனை சங்க அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனங்கள் விற்ற கார்களின் எண்ணிக்கை 72,295ஆகும் என சங்கத்தின் தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும், விற்பனை விவரம் சங்கத்தின் இணையதளத்தில் கிடைக்கவில்லை.
கடந்த மாதம் அந்நாட்டில் ஒரு பெரிய வாகனக் கண்காட்சி நடைபெற்றது, அங்கு வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 19 விழுக்காடு அதிகரித்து 8 டிரில்லியன் ரூபாயாக (2.2 டிரில்லியன் வெள்ளி ) உயர்ந்துள்ளதாகப் பிஸ்னஸ். கோம் (Bisnis.com) தெரிவித்தது.
அண்மைய ஆண்டுகளில் பல சீன மின்சார வாகனங்கள் இந்தோனேசிய சந்தையில் நுழைந்துள்ளன. இதில் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான பி ஒய.டி. ஆகும். இது தற்போது நாட்டில் பேட்டரி அடிப்படையிலான மின்சார வாகன விற்பனையில் சந்தைப் பங்கில் சுமார் 36 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
- ராய்ட்டர்ஸ்


