NATIONAL

தாய்லாந்தின் யாலா, நராத்திவாட், பட்டாணி ஆகிய இடங்களுக்கு தற்போது செல்ல வேண்டாம் என மலேசியர்களுக்கு அறிவுறுத்து

11 மார்ச் 2025, 3:43 AM
தாய்லாந்தின் யாலா, நராத்திவாட், பட்டாணி ஆகிய இடங்களுக்கு தற்போது செல்ல வேண்டாம் என மலேசியர்களுக்கு அறிவுறுத்து

புத்ராஜெயா, மார்ச் 11 - தாய்லாந்தின் யாலா, நராத்திவாட், பட்டாணி ஆகியப் பகுதிகளுக்கான பயணங்களை ஒத்தி வைக்குமாறு மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அம்மூன்று இடங்களுக்கும் அவசியமோ அவசரமோ இல்லாத பட்சத்தில் இப்போதைக்கு அங்கு செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.

அதே சமயம் தற்போது அங்குள்ள மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப, கவனமுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.

ஏதாவது அவசரம் ஏற்பட்டால், சொங்லாவில் உள்ள மலேசியப் பேராளரகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.

அண்மையில் அங்கு ஏற்பட்ட சில அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அங்குள்ள நிலவரங்கள் தொடர்ந்து காண்காணிப்படும் என்றும் விஸ்மா புத்ரா கூறியது.

ஆகக் கடைசியாக தென் தாய்லாந்தில் உள்ள ஒரு மாவட்ட அலுவலகத்தில் இரட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரு தொண்டூழியப் காவல்துறையினர் கொல்லப்பட்ட வேளை, 8 பேர் காயமடைந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.