செமினி, மார்ச் 11 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் சரக்கு வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) தடை விதித்துள்ளது.
இந்நடவடிக்கையின் மூலம் சீரான போக்குவரத்தையும் சாலைப் பாதுகாப்பையும் மேம்படுத்தவும் உறுதி செய்யவும் முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
பெருநாளின்போது சொந்த ஊர்களுக்குச் செல்லும் தனியார் வாகனங்களினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் போக்குவரத்தை ஈடுசெய்வதையும் சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதையும் இந்நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த உத்தரவுக்கு இணங்கி நடக்குமாறு அனைத்து சரக்கு வாகன உரிமையாளர்களையும் ஓட்டுநர்களையும் போக்குவரத்து அமைச்சும் ஜே.பி.ஜே.வும் கேட்டுக்கொள்கின்றன.
அவ்வாறு செய்யத் தவறினால் 300 வெள்ளி அபராதம் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால் 2,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அவர் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு ஜே.பி.ஜே. சிறப்பு நடவடிக்கை மற்றும் அமலாக்க அதிகாரிகளுடன்
நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லியும்
கலந்து கொண்டார்.
முன்னதாக தமதுரையின் போது சீனப் புத்தாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட அமலாக்க முயற்சிகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை விவரித்த அவர், அக்காலக்கட்டத்தில் சாலை விபத்துகள் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளதாகச் சொன்னார்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக 2025 நோன்புப் பெருநாள் சிறப்பு நடவடிக்கை மார்ச் 24 முதல் ஏப்ரல் 8 வரை நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
போக்குவரத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் வாகனமோட்டிகளைக் கண்காணிப்பது, கண்டறிவது மற்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
பண்டிகை காலம் முழுவதும் சாலைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும் வாகன ஓட்டிகளுக்கு லோக் நினைவூட்டினார்.
பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தகவல்களை MyJPJ செயலி (e-Aduan@jpj) மூலமாக அல்லது JPJ இன் அதிகாரப்பூர்வ புகார் மின்னஞ்சல் aduantrafik@jpj.


