NATIONAL

பெருநாளை முன்னிட்டு பொருள்களின் விலை கண்காணிக்கப்படும் - ஆட்சிக்குழு உறுப்பினர் ரிஸாம் தகவல்

10 மார்ச் 2025, 8:26 AM
பெருநாளை முன்னிட்டு பொருள்களின் விலை கண்காணிக்கப்படும் - ஆட்சிக்குழு உறுப்பினர் ரிஸாம் தகவல்

ஷா ஆலம், மார்ச் 10 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு  குறிப்பாக விழாக்காலக் கால உச்சவரம்பு  விலைத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் மீது மாநில அரசு விலைக் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ளும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை பயனீட்டாளர்களுக்கு சுமையாக இல்லாதிருப்பதை உறுதி செய்வதற்காக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுடன்  இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகப் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  கூறினார்.

ஒவ்வொரு முறையும் பெருநாள் நெருங்கும்போது,  குறிப்பாக அதிக தேவை உள்ள பொருட்களின் விலை நாங்கள் கண்காணிக்கிறோம். இந்த கண்காணிப்பில் பல்பொருள்

விற்பனை மையங்களும் அடங்கும்.

வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருள்கள்  நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு நாங்கள் நினைவூட்டுகிறோம்

வாடிக்கையாளர்கள் அதிக விலையால் சுமையை எதிர்நோக்குவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்று டத்தோ ரிஸாம் இஸ்மாயில் சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.

ஆகவே, அத்தியாவசியப் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் அல்லது மிக அதிகமாக விற்பனை செய்யும் வணிகர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

புகார்களை நேரடியாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அல்லது பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு மற்றும் உள்ளூர் அமலாக்க தரப்பிடம் தெரிவிக்கலாம். இந்த நடவடிக்கை ரமலான் விற்பனை சந்தைக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.