பெட்டாலிங் ஜெயா, மார்ச் 10 - நேற்றிரவு நடைபெற்ற மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்
போட்டியில் சிலாங்கூர் அணி கிளந்தானை 7-0 என்ற கோல்களில் தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்தது.
இதில் மூன்று கோல்களை அடித்து சிலாங்கூரின் முஹமட் ஃபைசால் அப்துல் ஹலிம் ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் சிலாங்கூருக்கு கூடுதல் பலத்தை அளித்தது.
ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் சிலாங்கூர் அணியின் கேட்பன் முஹமட் சஃபுவான் பஹாருடின் முதல் கோலை அடித்து, தமது அணியில் கோல் வேட்டையை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர், முதல் பாதி நிறைவடைவதற்குள் மேலும் இரு கோல்களை அடித்து சிலாங்கூர் முன்னனி வகித்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் களமிறக்கப்பட்ட சிலாங்கூர் அணியின் இறக்குமதி ஆட்டக்காரர் யொஹன்ரி ஒரொஸ்கோ தமது அணியின் கோல் எண்ணிக்கையை அதிகரித்தார்.
அதனை தொடர்ந்து, 54 மற்றும் 56-வது நிமிடங்களில் இரு கோல்களையும், 66-வது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்து ஃபைசால் ஹலிம் ஹெட்ரிக் சாதனையை படைத்தார்.
முஹமட் அலிஃப் இஸ்வான் யுஸ்லான் சிலாங்கூர் அணியின் ஏழாவது கோலை அடித்து தமது அணியின் மிகப் பெரிய வெற்றியை உறுதிசெய்தார்.
இந்த வெற்றியின் வழி, 46 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் சிலாங்கூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.


