நியுயார்க், மார்ச் 10 - இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களில் மேற்கு கரை,
காஸா, ஜெருசலம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலிய பெண்களுக்கு
ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து பாலஸ்தீன அரசின்
மகளிர் விவகார அமைச்சு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த
அறிக்கையில் காஸாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்
காரணமாக 12,298 பாலஸ்தீனப் பெண்கள் பலியானதாக அந்த அறிக்கையை
மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) செய்தி
வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து மேற்கு கரையில் பெண்கள்,
சிறார்கள் உள்பட 928 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
இந்த போர் காரணமாக காஸாவில் சுமார் 10 லட்சம் பெண்கள்
குடியிருப்புகளை இழந்துள்ளனர். இடப் பெயர்வினால் பெண்கள் மற்றும்
சிறார்கள் உள்பட 12 லட்சம் பேர் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பெண்கள் பட்டினி, வன்செயல் மற்றும் அடிப்படைத்
தேவைகளைப் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமை போன்ற பிரச்சினைகளை
எதிர்கொள்கின்றனர் என்று அந்த அறிக்கை கூறியது.
பாலஸ்தீன பெண்கள் குறிப்பாக காஸாவைச் சேர்ந்தவர்கள் கடுமையான
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். பெண்கள் மத்தியில்
வேலையின்மை 95 விழுக்காட்டை எட்டியுள்ளது. பேருக்கு முன் இந்த
எண்ணிக்கை 67.6 விழுக்காடாக இருந்தது.
மேலும், காஸாவிலுள்ள 18 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 91 விழுக்காட்டினர்
கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர். ஆறு
மாதத்திற்கும் குறைவான குழந்தைகளில் 98 விழுக்காட்டினர் கடுமையான
ஊட்டச்சத்து பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
போரில் ஏற்பட்ட கடுமையானச் சேதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான
பெண்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். காஸாவில் உணவுப்
பொருள்களின் விலை 309.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால்
அங்குள்ள குடுமங்கள் அடிப்படை பொருள்களை வாங்குவது அறவே
இயலாத ஒன்றாகி விட்டது.


