பாங்கி, மார்ச் 10 - மதப் பிரச்சனைகளை அரசியல் ஆயுதமாகக் குறிப்பாக, சுய நலனுக்காக இந்த விவகாரத்தை எந்தவொரு கட்சி அல்லது சமுதாயத் தலைமைத்துவமும் பயன்படுத்த கூடாது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தி இருக்கின்றார்.
''நாம் இச்செயலை தொடர்ந்தால், அது மக்களைப் பாதிக்கும். ஆனால், அரசாங்கத்தின் அணுகுமுறை உறுதியாக இருக்க வேண்டும். மனித கண்ணியம் மற்றும் மதத்தை இழிவுபடுத்துவதை அனுமதிக்கப்படாது.
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இச்செயலை மேற்கொள்ள கூடாது. இஸ்லாம் நாம் மதிக்கும் அதிகாரப்பூர்வ மதம். ஆனால், நாம் நல்லிணக்கத்தை பேணுகிறோம். அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர், அது உங்களை அழிக்கும்'', என்று அவர் கூறினார்.
அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களுக்காக மதப் பிரச்சனைகளை இனி பயன்படுத்தாமல் இருக்க அனைத்து தரப்பினரும் விதிமுறைகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


