ஷா ஆலம், மார்ச் 9- ஜோர்டானில் பயின்று வந்த இரண்டு சிலாங்கூர் மாணவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது.
சுமைய்யா அசாமுடின் மற்றும் பாத்திமா நுஹா முஸ்தாசா ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
சுமையாவுக்கு லேசான காயங்களும் பாத்திமா நுஹாவுக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எனது அலுவலகம் தொடர்பில் உள்ளது.
மேலும் நாங்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்க தனது தரப்பு தயாராக இருப்பதாக அமிருடின் விளக்கினார்.மாணவர்கள் விரைவில் குணமடைய ஒன்றாக பிரார்த்தனை செய்வோம் என்று அவர் கூறினார்.


