கோலாலம்பூர், மார்ச் 9- பகாங், குவாந்தானில் உள்ள பண்டார் பாரு பலோக்கில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நிதியுதவி அளித்தார்.
கமருஸமான் ஓத்மான் என்ற அந்த நபர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டப் பின்னர் படுத்தப் படுக்கையாகவும் குடும்ப உறுப்பினர்களை முழுமையாகச் சார்ந்தும் இருக்கிறார்.
கமருஸமான் ஒரு காலத்தில் தனது குடும்பத்தை காப்பாற்ற கடுமையாக உழைத்தார். ஆனால், பக்கவாதம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. இந்த பாதிப்பினால் அவரால் வேலை செய்ய முடியாமல் போனது. வருமான ஆதாரத்தை இழந்ததோடு நடமாட முடியாமல் முடங்கிப் போகும் சூழலும் ஏற்பட்டது என பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் ஃபௌசி கூறினார்.
கமருஸமான் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக இன்று அவரைச் சந்தித்து
பிரதமரின் நன்கொடையை அவரிடம் வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்று அவர் தனது முகநூல் வழியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
வாழ்க்கை எதிர்பாராத விதமாக மாறக்கூடும் என்றாலும் கமருஸமான் தனியாகப் போராடவில்லை என்று அகமது ஃபர்ஹான் கூறினார்.


