செம்புர்ணா, மார்ச் 9- இங்குள்ள கம்போங் கெராமட்டில் சாலையோரம் புற்களுக்கு மத்தியில் தொப்புள் கொடியுடன் ஒரு ஆண் குழந்தை நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.
துணியால் சுற்றப்பட்ட நிலையில் சாலையோரம் கிடந்த அக்குழந்தையை பொதுமக்களில் ஒருவர் பிற்பகல் 1.00 மணியளவில் கண்டுபிடித்ததாக செம்புர்ணா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது சப்ரி ஜைனோல் கூறினார்.
அக்குழந்தை தற்போது செம்புர்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 3.1 கிலோகிராம் எடையுள்ள குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக முகமது சப்ரி கூறினார்.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் செம்புர்ணா மாவட்ட காவல் தலைமையகத்தை 089-782020 என்ற எண்ணில் அல்லது புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது ஹபிசுடின் அக்ரம் கஃபார் இஸ்மாயிலை 013-7557293 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.


