கோலாலம்பூர், மார்ச் 7 - 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில், மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை, 24 நில உள்வாங்கும் சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் மூன்று சம்பவங்களும், கிளந்தானில் இரண்டு சம்பவங்களும், நெகிரி செம்பிலான், கெடா, சிலாங்கூர், மலாக்கா மற்றும் பெர்லிஸில் தலா ஒரு சம்பவமும் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்ற வலைத்தளத்தில், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு, வெளியிட்ட எழுத்துப்பூர்வப் பதிவில் அத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நிலம் உள்வாங்கும் சாத்தியம் இருக்கும் இடங்களை உள்ளடக்கிய மேம்பாட்டுப் பகுதிகளில் புவியியல் பேரழிவுகளின் அபாயத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கு அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது.


