கோலாலம்பூர், மார்ச் 7 - ஏரா எஃபம் வானொலி நிலையத்தின் சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் குறித்த விசாரணையில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு (எம்.சி.எம்.சி) ஆஸ்ட்ரோ ஆடியோ முழு ஒத்துழைப்பை வழங்கும்.
எம்.சி.எம்.சி வெளியிட்ட அறிக்கையை கவனத்தில் கொண்டுள்ளதோடு, அவர்கள் கோரியதற்கு ஏற்ப தகுந்த பதிலை தங்கள் தரப்பு வழங்கும் என்று ஆஸ்ட்ரோ ஆடியோ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும் அறிவிக்கையை தாங்கள் அறிந்திப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அவகாசத்திற்குள் அதற்கான அதிகாரப்பூர்வ பதிலை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் ஆஸ்ட்ரோ ஆடியோ அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளது.
இவ்விவாகரத்தை கடுமையாக கருதுவதாகவும், தங்கள் நிறுவனம் நிர்வகிக்கும் ஒவ்வொரு தளத்திலும் அதன் தரநிலை விதிமுறைகளையும் சமூக வழிகாட்டுதல்களையும் பின்பற்றும், கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் ஆஸ்ட்ரோ ஆடியோ குறிப்பிட்டுள்ளது.
அதோடு, நடந்த சம்பவத்திற்கும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளுக்கும் ஆஸ்ட்ரோ ஆடியோ வருத்தம் தெரிவித்தது.
பிற மத சடங்குகளை அவமதித்து, ஏரா எஃபம் வானொலி நிலையத்தின் மூன்று ஊழியர்கள் சமூக ஊடகத்தில் காணொளி பதிவேற்றம் செய்தது தொடபில், விரிவான விசாரணை மேற்கொள்ள, தொடர்பு அமைச்சர் கடந்த மார்ச் நான்காம் தேதி எம்.சி.எம்.சிக்கு உத்தரவிட்டிருந்தார்.


