கோலாலம்பூர், மார்ச் 7 - சுற்றுச்சூழல் குற்றங்களைக் களைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த, 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டம், AKAS-சின் அதிகாரங்களை அரச மலேசியக் காவல்துறை படைக்கு வழங்குவது குறித்து, இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, NRES பரிசீலித்து வருகிறது.
சுற்றுச்சூழல் குற்றங்களை, 2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம் சட்டம், (அம்லா) மற்றும் 1959-ஆம் ஆண்டு குற்றச்செயல் தடுப்பு சட்டம், POCA-வின் கீழ் வைப்பதும், பரிந்துரைகளில் இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.
2015-ஆம் ஆண்டு முதல், 2023-ஆம் ஆண்டு வரையில், 764,453 மெட்ரிக் டன், உள்நாட்டு மின் மற்றும் மின்னணு கழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
47 வளாகங்களில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான சோதனையின் விளைவாக, 15,764 மெட்ரிக் டன் மின்னணு கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு 55 மில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


