பாகான் டத்தோ, மார்ச் 6 - நாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாளவும் அவர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கவும் `HLC` எனும் உயர் அளவிலான செயற்குழு ஒன்று உருவாக்கப்படவிருக்கின்றது.
அச்செயற்குழு, இதர ஐந்து அமைச்சுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று அதனை தலைமையேற்கும் துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, நிதி அமைச்சு, உள்துறை அமைச்சு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு அமைச்சர் மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ள அமைச்சுகளாகும் என்று சாஹிட் ஹமிடி கூறினார்.
HLC தொடங்குவதற்கான பரிந்துரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பேராக், பாகான் டத்தோவில், மேற்கு கடற்கரை மண்டல மீனவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


