ஷா ஆலம், மார்ச் 6 - இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக செகிஞ்சான், பாரிட் 4 வட்டாரத்திலுள்ள பல வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன.
சாலையோரத்தில் இருந்த சிறிய கட்டுமானங்கள் உட்பட பல குடியிருப்பாளர்களின் வீட்டுக் கூரைகள் 50 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு பறப்பதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
கனமழையுடன் கூடிய இந்த சூறாவளியில் கடை வரிசைகள், ஹோம் ஸ்தேய் தங்குமிடங்கள் மற்றும் நெல் நடவு இயந்திரப் பட்டறைகள் பெரும் பாதிப்புக்குள்ளானதாக புலெட்டின் உத்தாமா அகப்பக்கம் கூறியது.
இந்த சூறாவளிச் சம்பவத்தை கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமை சூப்ரிண்டெண்டன் அசாஹாருடின் தாஜூடின் உறுதிப்படுத்தினார்.


