கோலாலம்பூர், மார்ச் 6 – 1988 ஆம் ஆண்டின் தீயணைப்பு சேவை சட்டத்தை திருத்துவதற்கான ( சட்டம் 341 ) 2025ஆம் ஆண்டின் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வழங்கி வரும் தடுப்பு மற்றம் மீட்பு நடவடிக்கைகளுக்கு கௌரத்தை ஏற்படுத்துவதோடு மக்களின் பாதுகாப்பையும் இந்த மசோதா மேம்படுத்துகிறது .
கால மாற்றத்திற்கு ஏற்ப சட்டம் 341 மேலும் ஆக்கப்பூர்வமாக இருப்பதையும் இந்த திருத்தம் வழிவகை செய்வதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
தீயணைப்பு மீட்புத்துறை மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதற்கும் , தீ விபத்தின்போது உயிர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கு திறம்பட செயல்படும் இதர பல்வேறு நோக்கங்களையும் சட்டம் 341 கொண்டுள்ளதாக அவர் கூறினார்.


