NATIONAL

கருவூலத்தில் சுங்க அதிகாரி மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

6 மார்ச் 2025, 2:45 AM
கருவூலத்தில் சுங்க அதிகாரி மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

புத்ராஜெயா, மார்ச் 6 - கருவூலத்தில் நேற்று காலை இறந்த நிலையில்

கண்டு பிடிக்கப்பட்ட சுங்க அதிகாரியின் மரணத்திற்கான காரணத்தைக்

கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மரணச் சம்பவம் குறித்து அரச மலேசிய போலீஸ் படை விசாரணை

நடத்தி வருவதாகக் கூறிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின்

நசுத்தியோன் இஸ்மாயில், மரணத்திற்கான காரணத்தை

வெளியிடுவதற்கான தருணம் இன்னும் வாய்க்கவில்லை என்றார்.

அந்த அதிகாரியின் உடல் நேற்று காலை கண்டு பிடிக்கப்பட்டது

தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து

விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்போதைக்கு இந்த சம்பவம் குறித்து கருத்துரைக்க இயலாது.

விசாரணையை நடத்துவற்கான முழு பொறுப்பையும் நான் போலீசாரிடம்

ஒப்படைத்து விடுகிறேன் என்று உள்துறை அமைச்சின் ஊழியர்கள் பங்கு

கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார்.

நாற்பத்தைந்து வயதுடைய அந்த நிதியமைச்சின் அதிகாரி கருவூல

அலுவலகத்தில் கேபிள் டை எனப்படும் சுருக்கு நாடாவினால் கழுத்து

மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்த கிடக்கக் காணப்பட்டார்.

இதனிடையே, அந்த அதிகாரி அலுவலக அறையில் இறந்து கிடந்ததை

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது ஈசா நேற்று

அறிக்கை ஒன்றின் வாயிலாக உறுதிப்படுத்தினார்.

இதுவரை குற்றத்தன்மைக்கான எந்த அறிகுறியும் சம்பவ இடத்தில் இது

வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் இச்சம்பவம் திடீர் மரணம் என

வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.