சபாக் பெர்ணம், மார்ச் 6 - அரசு ஊழியர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூடுதல் சிறப்பு நிதி உதவியை (பி.கே.கே.) சிலாங்கூர் அரசு எதிர்வரும் மார்ச் 19ஆம் தேதி அறிவிக்கும்.
நேற்று காலை நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இதன் கூடுதல் அம்சங்களில் ஒன்றாக விளங்குவது பி.கே.கே.1.0ஐ விட கூடுதல் தொகையை அரசு நிர்ணயித்துள்ளதாகும். மார்ச் 19ஆம் தேதி அரசு ஊழியர்களுடன் ரமலான் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வின் போது அதனை அறிவிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று சுங்கை பெசாரில் உள்ள மக்முரியா பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்வின் போது அவர் இதனைக் கூறினார்.
அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பி.கே.கே. நிதியுதவியை அதிகரிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தின் போது மந்திரி புசார் தெரிவித்திருந்தார்


