ஷா ஆலம், மார்ச் 5 - உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு RM1,000 உதவித் தொகையை வழங்கும் 2025ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி வெகுமதியைப் பெற மார்ச் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சிலாங்கூர் மாணவர்களுக்கு RM1,000 வெள்ளி ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் http://www.
ஆவணங்களை முகப்பிடங்களில் நேரடியாக சமர்ப்பிக்க முடியாது. மேலும் இறுதி தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்று முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
RM5,000 வெள்ளி மற்றும் அதற்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு RM1,000 உதவித் தொகையை மாநில அரசு வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் முன்னதாகக் கூறிருந்தார்.
இவ்வாண்டு பொது உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு உதவுவதற்காக 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


