NATIONAL

குடும்ப வன்முறைச் சட்டம் மற்றும் அது தொடர்புடைய சட்டங்களில் திருத்தம் செய்வது மதிப்பாய்வு செய்யப்படும்

5 மார்ச் 2025, 4:47 AM
குடும்ப வன்முறைச் சட்டம் மற்றும் அது தொடர்புடைய சட்டங்களில் திருத்தம் செய்வது மதிப்பாய்வு செய்யப்படும்

நாடாளுமன்றம், மார்ச் 5 - கட்டுப்பாடு மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுவதை உறுதிச் செய்ய, 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் (521) உட்பட அது தொடர்புடைய பிற சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான தேவைகள், அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும்.

மேலும், 2023-ஆம் ஆண்டில் பதிவான 5,507 குடும்ப வன்முறை வழக்குகளுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு 7,116ஆக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரச மலேசியக் காவல்துறை வழங்கிய அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மதிப்பாய்வு செய்யப்படுவதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மட் கூறினார்.

''தற்போது மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு, குடும்ப வன்முறை வழக்கை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.

குடும்ப வன்முறைக்குத் தீர்வு காணும் ஒரு குழுவை நிறுவ, அரசாங்க நிறுவனம் உட்பட பல்வேறு அரசு சாரா நிறுவனங்களின் வீயூக ஒத்துழைப்பை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மேற்கொள்ளவுள்ளது'', என்று அவர் கூறினார்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த, சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அமைச்சின் திட்டங்கள் குறித்து, போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் எழுப்பிய கேள்விக்கு நோராய்னி இவ்வாறு பதிலளித்தார்.

தற்போதைய குடும்ப கட்டமைப்பிற்கு ஏற்ப வலுவான குடும்ப நிறுவனங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தேசிய குடும்பக் கொள்கை மற்றும் அதன் செயல் திட்டங்கள் புதுப்பிக்கப்படுவதை, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு உறுதிச் செய்யும் என்று அவர் மேலும் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.