மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை அணுகலை எளிதாக்க, தேசிய மாற்றுத் திறனாளி மன்றத்தின் கீழ் செயல்படும் வேலை வாய்ப்பு செயற்குழு மேற்கொண்ட வியூகத்தின் அடிப்படையில், அந்த வெற்றி கிடைக்கப் பெற்றதாக மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் தெரிவித்தார்.
இதைத் தவிர்த்து, மற்ற வியூகங்களின் அடிப்படையில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் பி.எஸ்.எம்.பி மூலமாக மனிதவள அமைச்சு, மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்திலும் கவனம் செலுத்துவதாக டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் கூறினார்.
''பல்வேறு திறன் சார்ந்த அல்லது சான்றிதழ் கல்விகள் மூலம் அடிப்படை பயிற்சி திறன்களுடன் மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்துவதற்கான முதன்மை பயிற்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்தில் மொத்தம் 1,915 பேர் பங்கேற்றிருந்தனர்'', என்று அவர் கூறினார்.
இதனிடையே, ஆள்பலத் துறை ஜே.தி,எம் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க மனிதவள அமைச்சு முனைந்து வருவதோடு, மாதத்திற்கு 300 ரிங்கிட் அலவன்ஸ் தொகை மற்றும் கல்விக் கட்டண விலக்கு முறையிலும் உதவி புரிந்து வருகிறது.
2020 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 245 மாற்றுத்திறனாளி மாணவர்கள், வரைகலை தொழில்நுட்பம், மின்சார தொழில்நுட்பம் மற்றும் இயந்திர தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மனிதவளத் துறையின் கீழ் செயல்படும் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுள்ளனர்.


