NATIONAL

ரமலான் காலத்தில் பொருட்களை பொட்டலமிட அதிகமாக செலவு செய்வதை தவிர்ப்பீர் – பிரதமர் கோரிக்கை

4 மார்ச் 2025, 8:21 AM
ரமலான் காலத்தில் பொருட்களை பொட்டலமிட அதிகமாக செலவு செய்வதை தவிர்ப்பீர் – பிரதமர் கோரிக்கை

புத்ராஜெயா, மார்ச் 4 – அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் அன்பளிப்பு பொருட்களைபொட்டலமிடிஅழகு படுத்த அதிகமாக செலவிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இக்காலக்கட்டத்தில் மிதமான போக்கைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்கொடைப் பொருட்களை பொட்டலமிடுவதற்கு அதிக விலையில் செலவு செய்வது குறித்து பிரதமர் துறையில் மாதந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் தனது கவலையை தெரிவித்தார்.

சில நேரங்களில் நன்கொடைப் பொருட்கள் குறிப்பாக பேரிச்சம் பழங்களை பொட்டலமிடுவதற்கு அப்பொருளின் அசல் விலையை விட அதிகமாக செலவு செய்யப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினைர்.

ரமலானின் உண்மையான முக்கியத்துவத்தையும் உணர்வையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நன்கொடை வழங்கும் பொருட்களை ஆடம்பரமான பெட்டிகளை பயன்படுத்தி வழங்குவதால் மக்களுக்கு எந்தவொரு பயனும் கிடைப்பதில்லை.

பொட்டலிங்களின் ஆடம்பரத்தைவிட உண்மையான உதவியில் கவனம் செலுத்துவதுதான் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நம்பிக்கையை வலுப்படுத்தவும், ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும், வசதியற்றவர்கள் மீது இரக்கத்தை வளர்க்கவும் ரமலான் காலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.