ஷா ஆலம், மார்ச் 4 - மோசடி நடவடிக்கையால் வாடிக்கையாளருக்கு
ஏற்படும் இழப்புக்கு வங்கிகளின் பலவீனம் காரணமாக இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டால் அந்த இழப்புக்கு சம்பந்தப்பட்ட நிதி ஸ்தாபனங்களே
பொறுப்பேற்க வேண்டும் என்று துணை நிதியமைச்சர் லிம் ஹூய் யிங்
கூறினார்.
பேங்க் நெகாரா மலேசியாவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப மோசடி
தொடர்பான ஒவ்வொரு சம்பவத்தையும் சம்பந்தப்பட்ட வங்கிகள்
விரிவாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க வேண்டும் என்று அவர்
சொன்னார்.
இந்த புதிய கொள்கையின் படி இது போன்ற மோசடிச் சம்பவங்களில்
பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் முழு இழப்பையும் ஏற்க வேண்டிய
நிலை வராது. மாறாக, உரிய இழப்பீட்டை பெறும் உரிமை
வாடிக்கையாளருக்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போகும்
சம்பவங்களிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கான மாநில
அரசின் நடவடிக்கை குறித்து பெக்கான் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ
முகமது புசி ஷ் அலி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர்
இவ்வாறு சொன்னார்.
வங்கியின் முடிவு அல்லது இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள
மறுக்கும் வாடிக்கையாளர்கள் நிதிச் சந்தை இடைத்தரகர் சேவையை
நாடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒரு சில வங்கி வாடிக்கையாளர்கள் நம்பத்தகாத தரப்பினரிடம்
தாங்களாகவே முன்வந்து பாதுகாப்பு தொடர்பான தகவல்களை
வழங்குவதோடு சந்கேத்திற்கிடமான செயலிகளையும் பதிவிறக்கம்
செய்வதாகவும் அவர் சொன்னார்.


