கோலாலம்பூர், மார்ச் 4 - பினாங்கு மாநிலத்தின் பெர்மாத்தாங் பாசிரில் தனது மாற்றுத் திறனாளி பேரப்பிள்ளையை இன்னும் பராமரித்து வரும் மூதாட்டியான மஸானா ஹாஷிமுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார்.
அக்குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இந்த ரொக்க நிதியுதவியை பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் பவுசி வழங்கினார்.
அவர் சுமக்கும் வாழ்க்கைச் சுமை மிகவும் கனமானது. நான் அவருக்கு ஆறுதல் கூறுவதற்கு மட்டுமின்றி மிக வறிய நிலையிலிருந்து அவர் வெளியேற உதவவும் நோக்கிலும் இங்கு வந்துள்ளேன் என்று அகமது ஃபர்ஹான் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இருப்பினும், முயற்சிகள் இத்துடன் நிற்கவில்லை. பினாங்கு ஸக்கத் வாரியம் மற்றும் சமூக நலத்துறை (ஜே.கே.எம்) ஆகியவற்றின் ஒத்துழைப்பு மூலம் அவர் உடனடியாக வறுமையிலிருந்து மீள்வதற்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த முயற்சியின் மூலம் மசாஸானாவும் அவரது குடும்பத்தினரும் இனியும் துன்பத்தில் உழலாமல் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்களின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதோடு அனைத்து விவகாரங்களும் எளிதாகத் தீரும் என்றும் நம்புகிறேன் என அவர் கூறினார்.


