NATIONAL

கடந்த மாதம் வரை 3 சமூக ஊடக நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன

4 மார்ச் 2025, 3:54 AM
கடந்த மாதம் வரை 3 சமூக ஊடக நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன

நாடாளுமன்றம், மார்ச் 4 - இவ்வாண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி வரையில் மூன்று சமூக ஊடக சேவை வழங்குநர் நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன.

WeChat அனைத்துலக நிறுவனம், TikTok நிறுவனம் மற்றும் Telegram Messenger Incorporated ஆகிய மூன்றும் உரிமம் பெற்றிருப்பதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

மேலும், பதிவு நோக்கங்களுக்காக தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்வதற்கான பணியில் முகநூல், இண்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களை இயக்கும் META ஈடுபட்டுள்ளதாகவும் தியோ கூறினார்.

''சேவை வழங்குநர்கள் மீதான உரிம கட்டமைப்பின் அமலாக்கம் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் உறுதி செய்ய, X தளம், கூகுள் மற்றும் யூடியூப் ஆகிய தளங்களுக்கு, எம்சிஎம்சி ஆழமான ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. இது பாதுகாப்பான சமூக ஊடக சூழலை உருவாக்கும்'', என்று அவர் கூறினார்.

மக்களவையில், பினாங்கு, தாசிக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைஃபூல்ருடின் வான் ஜன் எழுப்பிய கேள்விக்கு, தியோ இவ்வாறு பதிலளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.