ஷா ஆலம், மார்ச் 4- கிள்ளானில் இன்று கடல் பெருக்குடன் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கிள்ளான் மாவட்டம் மற்றும் நில அலுவலகம் தெரிவித்துள்ளது.
போர்ட் கிள்ளான் நிலையத்தில் இரவு 9.00 மணிக்கு 4.7 மீட்டர் வரையிலும் இன்று காலை 5.1 மீட்டர் வரையிலும் அலைகள் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கடல் பெருக்கு நிகழ்வுடன் கிள்ளானைச் சுற்றியுள்ள பல இடங்களில் காலையில் பலத்த மழையும் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் குறித்து எப்போதும் விழிப்புடனும் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அந்த அலுவலகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
வானிலை தொடர்பான தகவல்களுக்கு கிள்ளான் மாவட்ட பேரிடர் நடவடிக்கை மையத்தை 03-33829292 அல்லது 016-2584350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


