MEDIA STATEMENT

நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா- நாடாளுமன்றத்தை விடுவிக்கும் பிரதமரின் துணிவைக் காட்டுகிறது

4 மார்ச் 2025, 2:55 AM
நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா- நாடாளுமன்றத்தை விடுவிக்கும் பிரதமரின் துணிவைக் காட்டுகிறது

கோலாலம்பூர், மார்ச் 4- நாடாளுமன்றச் சேவை 2025 சட்ட மசோதா இன்று மக்களவையில் இரண்டாம் வாசிப்புக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. நிர்வாக அதிகாரக் கிளையிலிருந்து நாடாளுமன்றத்தை விடுவிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்து வரும் துணிச்சலான நடவடிக்கையை இது புலப்படுத்துகிறது.

1966ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சேவைச் சட்டம் கடந்த 1992ஆம் ஆண்டு அகற்றப்பட்ட நிலையில் நாடாளுமன்ற அதிகாரத்தை பிரதமர் துறையிடமிருந்து பிரிக்கும் இந்த முடிவு, நாடாளுமன்ற அமைப்பு முறையில் சீர்த்திருத்தத்தை கொண்டு வருவதில் பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் கொண்டுள்ள கடப்பாட்டை புலப்படுத்தும் வகையில் உள்ளது என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கூறினார்.

சுதந்திரமான அமைப்பாக செயல்படுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தை ‘விடுவிப்பதற்கு’ பிரதமர் அன்வாரும் அமைச்சர்களும் எடுத்த துணிச்சலான முடிவைப் பாராட்டுகிறேன். கடந்த 1992ஆம் ஆண்டில் இந்த சட்டம் அகற்றப்பட்டதிலிருந்து நாடாளுமன்ற சுதந்திரம் குறித்து எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் குரல் எழுப்பவில்லை. காரணம், அதிகாரம் அவர்கள் கையிலே இருந்தது என அவர் சொன்னார்.

இதுதான் பிரதமரின் மகத்துவம். அவர் சொன்னபடி நடப்பவர். நாடாளுமன்ற சுதந்திரம் பற்றி அவர்  பேசுவதோடு மட்டுமின்றி செயலிலும் காட்டி கனவை நனவாக்கியுள்ளார் என்று பெர்னாமா டிவியில் நேற்று ஒளிபரப்பான ருவாங் பிச்சாரா நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து  கொண்ட போது அவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தை அமலாக்கும் பிரதமரின் நடவடிக்கை வழக்கத்திற்கு மாறானது. ஏனென்றால், பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் அவர் அதனை சாதித்துள்ளார் என்று ஜோஹாரி குறிப்பிட்டார்.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடிய இந்த 2025 நாடாளுமன்றச் சேவைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் அது நாட்டில் ஒரு வரலாற்றுச் சம்பவமாக விளங்கும் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.