ஜோர்ஜ் டவுன், மார்ச் 3 - பினாங்கு பாலத்தில் தொழிற்சாலை பேருந்து ஒன்றை மோதி வாகனம் விபத்துக்குள்ளானதில் 46 வயது பெண் ஒருவரும் 58 வயது ஆடவரும் பலத்த காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.
நேற்று காலை 9.20 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாக ஜோர்ஜ் டவுன் துணை ஓ.டி.பி.சி சுப்ரிடெண்டன் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.
பேருந்து நடு தடத்தில் இருந்து வலது தடத்திற்கு மாறிச் செல்லும்போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில், ஓட்டுநரும் அவரின் பயணியும் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 43-இன் கீழ் இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


