NATIONAL

`Skype` செயலி மே மாதம் மூடப்படும், மைக்ரோசோஃப்ட் அறிவிப்பு

3 மார்ச் 2025, 3:17 AM
`Skype` செயலி மே மாதம் மூடப்படும், மைக்ரோசோஃப்ட் அறிவிப்பு

நியூ யோர்க், மார்ச் 3 – எதிர்வரும் மே மாதம் தொடங்கி இணையம் வாயிலான தொலைப்பேசி மற்றும் வீடியோ சேவையான `Skype` பயன்பாட்டில் இருக்காது என மைக்ரோசோஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களின் log-in தகவல்களைப் பயனர்கள் `Microsoft Teams` செயலியில் பயன்படுத்த முடியும் என X தளம் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈராயிரத்தாம் ஆண்டுகளின் மத்தியில் முக்கியத் தொடர்பு முறையாக இருந்தது இந்த Skype செயலியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Skype-யை 8.5 பில்லியன் டாலரை ரொக்கமாகக் கொடுத்து வாங்கிய மைக்ரோசோஃப்ட் அதனை 14 ஆண்டுகளுக்குப் பிறகு மூடுகிறது.

இதற்கு காரணம் அண்மைய ஆண்டுகளில் அதன் பிரபலம் மெல்ல சரியத் தொடங்கியது.

கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகமே முடங்கிய போது, Zoom, Google Meet, Cisco Webex உள்ளிட்ட செயலிகள் பிரபலம் அடைந்திருந்த நிலையில் Skype தொடர்ந்து பின்தங்கியது.

கடந்த 15 ஆண்டுகளாக Apple நிறுவனத்தின் FaceTime, Meta-வின் `WhatsApp` போன்றவற்றின் வருகையாலும் Skype கடும் சவாலை எதிர்நோக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.