அமெரிக்கா, மார்ச் 3 - தேசிய ஓட்டப்பந்தய வீரர் முஹமட் அசீம் முஹமட் ஃபஹ்மி அயலகத்தில் மீண்டும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 60 மீட்டர் உள்ளரங்கு ஓட்டப்பந்தய போட்டியில், அவர் மூன்றாம் இடத்தை 6.56 வினாடிகளில் பிடித்து, தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.
2024 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் முகமட் அசீம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ப்ரையன் கோலேஜ் ஸ்டேஷனில் நடைபெற்ற 60 மீட்டர் போட்டியின் இறுதி சுற்றில், 6.56 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து, மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
முதலிடத்தை அமெரிக்க வீரர் 6.54 வினாடிகளில் கடந்து சாதனை படைத்த வேளையில், ஒரு விநாடி வித்தியாசத்தில் நைஜீரிய வீரர் இரண்டாம் இடத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் ஆர்பன் பல்கலைக்கழகத்தில், படித்துக் கொண்டிருக்கு அசிம் அங்குள்ள தடகள போட்டிகளில் பங்கேற்று சாதனைகளைப் படைத்து வருகிறார்.


