MEDIA STATEMENT

மனித கடத்தல் கும்பல் பிடிபட்டது, 15 இந்தோனேசிய முகவர்கள் கைது செய்யப்பட்டனர்

2 மார்ச் 2025, 10:50 AM
மனித கடத்தல் கும்பல் பிடிபட்டது, 15 இந்தோனேசிய முகவர்கள் கைது செய்யப்பட்டனர்

கோலாலம்பூர், மார்ச் 2: கடந்த இரண்டு மாதங்களாக மலேசியாவுக்குள் சக நாட்டு மக்களை கடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பதினைந்து இந்தோனேசிய பிரஜைகள் கடந்த நள்ளிரவில் சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ சுற்றியுள்ள பகுதியில்  ஓப் பிந்தாஸ் சோமில் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில் முகவர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர் களாக செயல்பட்டதாக நம்பப்படும் 22 முதல் 53   வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும், எட்டு ஆண்கள், ஏழு பெண்களும் கைதானவர்களில் அடங்குவர்.

மனித  கடத்தல் தடுப்பு மற்றும் புலம் பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு தலைமை உதவி இயக்குனர், புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை, எஸ். ஏ. சி சோப்பியன் சாண்டோங் கூறுகையில்  நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்த இந்நடவடிக்கையின் வழி, மலாக்கா ஜலசந்தியில் அறிவிக்கப் படாத கடல் வழிகளை பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் கடத்தல் நடவடிக்கைகளை முடக்குவதை  மையமாகக் கொண்டது என்றார்.

முதல் சோதனை  சுங்கை பூலோ பகுதியில் உள்ள இரண்டு ஹோம்ஸ்டே அலகுகளில் இருந்தது, அவை முகவர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர் களுக்கான தங்குமிடங்களாக பயன்படுத்தப்பட்டன, இரண்டாவது சோதனை சுங்கை பூலோ சௌஜானா உத்தாமாவில்  உள்ள பட்ஜெட் ஹோட்டலில் நடந்தது, இது ஒரு போக்குவரத்து இல்லமாகப் பயன்படுத்தப்பட்டது.

"பதிவு செய்யப்படாத வழித்தடங்களில், அதாவது கடல் வழியாக, ஒரு முகவரின் உதவியாளரின் உதவியுடன் மலேசியாவுக்குள் நுழைவதற்கு முன்பு ஹோட்டலில்  தங்க வைக்கப்படும் புலம்பெயர்ந்தோருக்கு  உணவு வழங்கு பவராகவும், அமைப்பாளராகவும் இந்த முகவர் செயல்பட்டார்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் மலாக்காவை சுற்றியுள்ள மனித கடத்தல் நடவடிக்கைகளில் சிண்டிகேட் தீவிரமாக ஈடுபட்டு இருப்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப் பட்டதாக சோஃபியன் கூறினார், ஒவ்வொரு புலம்பெயர்ந்தவருக்கும் ஒவ்வொரு பயணத்திற்கும் RM1,800 முதல் RM2,000 வரை வசூலிக்கப்படுகிறது.

கைது செய்யப் பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைகளுக்கு சுங்கை பூலோ  மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப் பட்டதாக அவர் கூறினார்.

நபர்கள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு சட்டம் (ஏடிஐபிஎஸ்ஓஎம்) 2007 இன் பிரிவு 26 ஏ மற்றும் குடிவரவு சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1) மற்றும் பிரிவு 15 (1) (சி) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.